Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 12 செப்டம்பர் (ஹி.ச.)
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசிய ஆணவப் பேச்சை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்த உண்மைத்தன்மை என்ன என்ற கேள்விக்கு?
அரசாங்கத்தில் அனைத்து பதிவேடுகளும் உள்ளது பார்த்துக் கொள்ளவும்.
திமுக ஆட்சி முடிந்து எம்ஜிஆர் ஆட்சி வந்தது. அதற்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி வந்தது.
உண்மை இல்லை என்றால் அவர்கள் விட்டு இருப்பார்களா என தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளை முறையாக கையாளவில்லை என திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டிற்கு,
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திமுக கூட்டணி கட்சியை கையாள்வது போல வேறு எந்த கூட்டமும் கையாள முடியாது.
அது மட்டுமல்லாமல் திருமாவளவன் சென்ற கூட்டணிக்காக தற்போது அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / ANANDHAN