Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செப்டம்பர் 17, 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு சென்னைக்கும் மதுரைக்கும் இடையே பயணிகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வரும் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலையில் மதுரை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலையில் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
பயணிகள் IRCTC இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b