விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மானாமதுரை - தாம்பரம் இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச) விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் மானாமதுரையில் இருந்து சென்
A special train will run between Manamadurai and Tambaram tomorrow for Vinayaka Chaturthi.


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச)

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் மானாமதுரையில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு நாளை (செப்.14) முன்பதிவில்லாத ஒரு வழி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் விநாயகா் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து திங்கள்கிழமை (செப்.14) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் மெமு சிறப்பு ரயில் அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரம் நிலையத்தை வந்தடையும். அந்த ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

முன்பதிவு இல்லாத ஒருவழி மெமு சிறப்பு ரயில் திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b