Enter your Email Address to subscribe to our newsletters

போலவரம் , 13 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் போலவரம் மாவட்டம் அடத்தீகலா மண்டலத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை ஆசிரம பள்ளியில் மாணவி ஒருவர் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் மாணவிகளை முறையாக கண்காணிக்கத் தவறியதே சம்பவத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமை ஆசிரியர் தூடா சாந்தமதி, விடுதி வார்டன் பல்லால விஜயகந்தம், வகுப்பு ஆசிரியர் காகூரி லோவம்மா ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மாணவியை கர்ப்பமாக்கியதாக கூறப்படும் பள்ளி சமையல்காரர் மங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழங்குடியினர் நலத்துறை துணை இயக்குனர் ருக்மாண்டையா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA