Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 13 செப்டம்பர் (ஹி.ச.)
வைகாபியில் கட்சி நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில், பல்வேறு நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.வி. சுப்பாரெட்டிக்கு ஒருங்கிணைந்த குண்டூர் மாவட்ட பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அவர் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களின் பொறுப்புகளை கவனித்து வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அல்லா அயோத்தி ராமிரெட்டிக்கு ஒருங்கிணைந்த கிருஷ்ணா மற்றும் பிரகாசம் மாவட்டங்களின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மந்திரி காருமூரி வெங்கட நாகேஸ்வரராவுக்கு ஒருங்கிணைந்த நெல்லூர் மாவட்ட பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாபட்லா மாவட்டம் சீராலா தொகுதியை சேர்ந்த பீரக சுரேந்திரபாபு, மாநில கைத்தறி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டி.எஸ்.சி. 2025 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி வரும் தேர்வர்களுக்கு ஆதரவாக போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களது கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுப்பதுடன், சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள தனியாக சட்டப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.சி. போராட்டக் குழுவில் எம்.எல்.சி.க்கள் லெல்ல அப்பிரெட்டி, பர்வதரெட்டி சந்திரசேகர் ரெட்டி, தமடம் கல்பலதா, பானுகண்டி சைதன்யா மற்றும் ரவிச்சந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டப் பிரிவில் பொன்னவோலு சுதாகர் ரெட்டி, மலசானி மனோஹர் ரெட்டி, சுதர்சன் ரெட்டி மற்றும் ஜி.வி.எஸ். கிஷோர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வைகாபியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய நியமனங்கள் மூலம் கட்சி அமைப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA