இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்குழுவை அமைத்தது காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர்!
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழு
Team


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழுக்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

இரண்டு தொகுதிகளிலும் தனித்தனியாக பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தோழர்களும் உள்ளூர் உறுப்பினர்களும் இணைந்து கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுராந்தகம் (35) தொகுதி

இங்கு தவெக வேட்பாளராக திருமதி மரகதம் குமாரவேல் போட்டியிடுகிறார்.

பணிக்குழுத் தலைவர்: ப. விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்: டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி., சுதா ராமலிங்கம் எம்.பி.

ஒருங்கிணைப்பாளர்கள்: ஜே. பி. பிரபு (செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்), வழக்கறிஞர் ஆர். சுந்தரமூர்த்தி (முன்னாள் தலைவர்)

27 மண்டலங்களுக்கு கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலப் பொறுப்பாளருக்கும் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

தாராபுரம் (101) தொகுதி

இங்கு தவெக வேட்பாளராக திருமதி பி. சத்யபாமா போட்டியிடுகிறார்.

பணிக்குழுத் தலைவர்: எஸ். ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்: எஸ். ஜோதிமணி எம்.பி., எம். கிறிஸ்டோபர் திலக் எம்.பி.

ஒருங்கிணைப்பாளர்கள்: பி. கிட்டுசாமி (திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்), கே. தென்னரசு (முன்னாள் தலைவர்)

31 மண்டலங்களுக்கு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலப் பொறுப்பாளர்களின் பெயர்களும், அவர்கள் பொறுப்பேற்கும் மண்டலங்களும், வாக்குச்சாவடி எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்ற வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN