தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு
புதுச்சேரி, 13 செப்டம்பர் (ஹி.ச.) 2026 மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிறுவன தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இ
By Election


புதுச்சேரி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

2026 மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிறுவன தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலுமே அமோக வெற்றி பெற்றார்.

இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, இரு தொகுதிகளில் வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதி ஒருவர், முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு மற்றொரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

இதன்படி, முதலமைச்சர் ரங்கசாமி மங்கலம் தொகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு, தனது சொந்த அரசியல் கோட்டையான தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை மே மாதம் ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாவை தொடர்ந்து அந்த தொகுதி அதிகாரப்பூர்வமாக காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் யார் களம் இறங்குவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அண்மையில் (செப்டம்பர் 5) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் போட்டியிடுவார் என முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வேட்பாளரை அறிமுகப்படுத்திப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எப்போதும் என்.ஆர். காங்கிரஸின் எஃகு கோட்டையாக திகழ்ந்து வருவதாகவும், இந்த இடைத்தேர்தலில் தங்களது கூட்டணி வேட்பாளர் அசோக் ஆனந்தன் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தர் ஆணையம் அறிவித்தது.

அதில் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இங்கு அக்டோபர் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் செப்டம்பர் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அசோக் ஆனந்தனை வேட்பாளராக களம் இறக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் - திமுக கூட்டணி மற்றும் பிற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தயாராகி வருவதால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாதக சார்பில் இந்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கார்த்திக் குமாரியை வேட்பாளராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN