அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட 700-க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுகவினர் நேற்று தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவரும
Case registered under three sections against over 700 DMK members


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுகவினர் நேற்று தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையான காவல்துறை அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட போராட்டத்தில் பங்கேற்ற

700-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளது.

சட்டவிரோதமாக கூடி ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம் போக்குவரத்துக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b