Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச)
சென்னைக்கு சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தின் போது திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசிய வார்த்தைகள் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆ.ராசா தனது சமீபத்திய பேச்சு தொடர்பாக வருத்தம் தெரிவித்து இன்று எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவரின் அடையாளத்தையும், அவரது உண்மையான வரலாற்றையும் சிலர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ஏளனம் செய்யும் இத்தகைய போக்கால் ஏற்பட்ட மனவலியின் காரணமாகவே தான் உணர்ச்சிவசப்பட்டு பேச நேரிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ஏளனம் செய்தவரின் அடையாளம் குறித்த உண்மையை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குறியாக்கியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தான் பயன்படுத்திய வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும் அந்த பதிவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனது கண்டனத்தில் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற திரிபுவாத போக்கை தொடர்பவர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றும் அந்த பதிவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b