பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விருப்பத் தேர்வு செய்ய செப்.16 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பதிவு மற்றும் கல்லூரிகளுக்கான விருப்பத் தேர்வை மேற்கொள்வதற்கு வரும
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விருப்பத் தேர்வு செய்ய செப்.16 வரை அவகாசம் நீட்டிப்பு


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான பதிவு மற்றும் கல்லூரிகளுக்கான விருப்பத் தேர்வை மேற்கொள்வதற்கு வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி உள்ளிட்ட துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை இணையதளம் வாயிலாக தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி விருப்பத் தேர்வை பதிவு செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்லூரி ஒதுக்கீட்டுக்கான முடிவுகள் வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் விருப்பத் தேர்வை பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b