தி.மு.க வை கடுமையாக விமர்சித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) தன்னைப் பற்றியும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் திமுகவினர் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுகவுக்கு வன்முறை அல்லது ஆபாசப் பேச்சுதான் அரசியல் ஆயுதங்க
நிர்மல்


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தன்னைப் பற்றியும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் திமுகவினர் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுகவுக்கு வன்முறை அல்லது ஆபாசப் பேச்சுதான் அரசியல் ஆயுதங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நேற்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திமுகவினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை எப்போது உணர்வீர்கள்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவை நோக்கி ஊழல், துரோகம் மற்றும் பொய்கள் குறித்து கேள்விகள் எழும்போதெல்லாம் வன்முறை அல்லது ஆபாசப் பேச்சை திமுக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். திமுகவினரின் தரமற்ற பேச்சுகளை அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் காட்ட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள், தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும், அரசியலில் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தவெகவை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் திமுகவினர் தெருவில் இறங்கி செய்யும் அட்டூழியங்களை நாங்கள் என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்” எனக் கூறியுள்ள சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கருத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P