தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், அரசியல் களத்தில் தொடர்ந்து இயங்குவார் சித்தராமையா - அமைச்சர் எச்.சி.பாலகிருஷ்ணா தகவல்
ராமநகரா, 13 செப்டம்பர் (ஹி.ச.) காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான காங்கிரஸ் செயற்குழுவில் (CWC) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சித்தராமையா பங்கேற்றார். இந்த நிலையில் இன்று ராமநகராவில் செய்தியாளர்களிடம் பேசிய க
Even if he steps away from electoral politics, Siddaramaiah will continue to be active in the political arena


ராமநகரா, 13 செப்டம்பர் (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான காங்கிரஸ் செயற்குழுவில் (CWC) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சித்தராமையா பங்கேற்றார்.

இந்த நிலையில் இன்று ராமநகராவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் பாலகிருஷ்ணா,

முதலமைச்சர் சித்தராமையாவிற்கு காங்கிரஸ் செயற்குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ளது, அது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் டெல்லிக்குச் சென்றார்.

கட்சியை வலுப்படுத்துவது குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது. சித்தராமையா தனது அரசியல் ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை.

தற்போதைய தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பு, குறிப்பாக தேர்தல்களில் பணம் புழங்குவது குறித்து அவர் தனது ஏமாற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலகக்கூடும், ஆனால் அரசியலில் தொடர்ந்து செயல்படுவார். சித்தராமையா எப்போதும் கட்சியுடனே இருப்பேன்.

மேலும், பணம் படைத்தவர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக கூறப்படும் சோதனைகளை விமர்சித்த அவர், யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தான் சோதனை நடத்துவார்கள்.

எங்களிடம் பணம் இல்லை, அதனால் எங்கள் வீட்டில் சோதனை நடத்த மாட்டார்கள், என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b