இலங்கைக்கு கடத்த இருந்த 6 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் - 4 பேர் கைது
புதுச்சேரி, 13 செப்டம்பர் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வகையில் காரைக்கால் போலீசார் கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட முழுவதும் பல்வேறு சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 0
Prison


புதுச்சேரி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வகையில் காரைக்கால் போலீசார் கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட முழுவதும் பல்வேறு சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 05ஆம் தேதி இலங்கைக்கு மெத்தாம்பெட்டமைன் என்கின்ற போதை பொருளை கடல் வழியாக கடத்த உள்ளதாக காரைக்கால் போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனடியாக காரைக்கால் போலீசார் இலங்கைக்கு கடத்த இருந்த 6 கோடி மதிப்பிலான சுமார் 7.60 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்கின்ற போதை பொருளை பறிமுதல் செய்து இந்த வழக்கில் இலங்கையை சேர்ந்த 1 நபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN