Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 13 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர், கருப்பம்பாளையம் பிரிவு அருகே, சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கரூரைச் சேர்ந்த ஜோதிமணி (40) மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி (56) ஆகிய இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்துலிங்கம் (65) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN