விநாயகர் சதுர்த்தியால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை - மீனவர்கள் கவலை
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, வழக்கமாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் சென்னை காசிமேடு மீன் சந்தை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு
விநாயகர் சதுர்த்தியால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை - மீனவர்கள் கவலை


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, வழக்கமாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் சென்னை காசிமேடு மீன் சந்தை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் விரதம் இருப்பதாலும், அசைவ உணவை தவிர்ப்பதாலும், மீன் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் வருகை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவிலான படகுகளே கடலுக்குச் சென்று மீன்களுடன் கரை திரும்பின.

வழக்கமாக அதிகாலை முதலே மீன் வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் நிரம்பி வழியும் காசிமேடு சந்தையில், இன்று கூட்டம் இல்லாமல் மீன் குவியல்கள் அப்படியே தேங்கி கிடந்தன.

மீன்களை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், வஞ்சிரம், சங்கரா, நெத்திலி போன்ற முக்கிய மீன் வகைகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் பல லட்ச ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும் காசிமேட்டில், பண்டிகை காரணமாக இன்று வியாபாரம் முற்றிலும் முடங்கியதால் மீன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b