Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 13 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக கேரளாவை தேர்வு செய்துள்ளார்.
அங்கு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளாவில் தங்கியிருந்தபோது அங்குள்ள மக்களின் அன்பு, விருந்தோம்பல் தன்னை வெகுவாக கவர்ந்ததாக பவன் கல்யாண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
மேலும் திருப்பிரயார் ஸ்ரீராமசாமி கோவில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில், மம்மியூர் ஸ்ரீமகாதேவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்ததாகவும், இந்த தரிசனங்கள் தனக்கு மன அமைதியையும் நிம்மதியையும் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பவன் கல்யாணின் பதிவுக்கு பதிலளித்த கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக கேரளாவை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.
கேரள மக்களின் அன்பும், கோவில் தரிசனமும் பவன் கல்யாணுக்கு அமைதியையும் குணமடைவதற்கான நம்பிக்கையையும் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தனது அறிக்கையில் கூறினார்.
மேலும், பவன் கல்யாண் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் கேரளாவுக்கு வர வேண்டும் என்று கேரள அரசு மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA