Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம்
தெருக்களுக்குள் நள்ளிரவில் திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத
நபர்கள், வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சரமாரியாக தாக்கி சேதப்படுத்தினர்.
இதில் தெருவில் நின்றிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த
சேதமடைந்தன.
நள்ளிரவில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே
பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொதுமக்கள் மீது அச்சுறுத்தல் விடுத்து பொது அமைதிக்கு பங்கம்
விளைவித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை
மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
தாக்குதலில் சேதமடைந்த கார், இருசக்கர
வாகனங்கள் மற்றும் பெரிய கற்களை நடுரோட்டில் போட்டு சாலையை முழுமையாக மறித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால் குற்றவாளிகளை
கைது செய்யும் முறை இந்த பாதையை திறக்க மாட்டோம் என மறியல் செய்து
வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய
மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam