மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழ
Bh


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜானகிராமனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மதுராந்தகம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை ஜானகிராமன் பெற்றுள்ளார்.

இதேபோல், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் குமாரிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தட்டாஞ்சாவடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த தேர்தலில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் கார்த்திகா மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ