நைஜீரியா, கியூபா வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
புதுடெல்லி , 13 செப்டம்பர் (ஹி.ச.) டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, நைஜீரியா மற்றும் கியூபா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நைஜீரிய வெளியுறவு மந்திரி பியாங்கா
A


புதுடெல்லி , 13 செப்டம்பர் (ஹி.ச.)

டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, நைஜீரியா மற்றும் கியூபா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

நைஜீரிய வெளியுறவு மந்திரி பியாங்கா ஒடுமெக்வு-ஒஜுக்வுவை சந்தித்த ஜெய்சங்கர், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

நைஜீரிய வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், கியூபா வெளியுறவு மந்திரி புரூனோ ரோட்ரிகிஸ் பர்ரில்லாவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

அப்போது, தெற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA