தனிப்பட்ட முறையில் எளிய மனிதர் எடப்பாடி பழனிசாமி - கவிஞர் வைரமுத்து புகழாரம்
திருச்சி, 13 செப்டம்பர் (ஹி.ச.) திருச்சியில் நடைபெற்ற தனியார் மணவிழா ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழாரம் சூட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த விழாவில் எடப்பாட
தனிப்பட்ட முறையில் எளிய மனிதர் எடப்பாடி பழனிசாமி - கவிஞர் வைரமுத்து புகழாரம்


திருச்சி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

திருச்சியில் நடைபெற்ற தனியார் மணவிழா ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழாரம் சூட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமி மிகவும் எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டார். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது சொந்த உழைப்பாலும், விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்து, தமிழகத்தின் மிக உயரிய பதவியான முதலமைச்சர் பதவி வரை வந்தடைந்தவர் என்றும் அவர் பாராட்டினார்.

மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் தான் இருக்க வேண்டும் என்று பலரும் தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த ஆசை இன்று இந்த மணவிழா மேடையில் நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவரது எளிமையும், உழைப்பும் இளைய தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு இலக்கியவாதியாக தனது பார்வையில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கைப் பயணத்தை தான் மதிப்பிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b