மதுரையை சீரமைக்க முடியாதவர் தமிழகத்துக்கு பாடம் எடுப்பதா? - த.வெ.க எம்எல்ஏ ரேவந்த் சரண் கடும் விமர்சனம்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) மதுரையில் தனது சொந்த அரசியல் செயல்பாடுகள் நல்லாட்சிக்கு சான்றாக இல்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு, ஊடகம் மற்றும் மக்கள் குறித்து ஒருவர் பாடம் எடுக்க முயற்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக மதுரவாயல் ச
Revanth


Bb


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரையில் தனது சொந்த அரசியல் செயல்பாடுகள் நல்லாட்சிக்கு சான்றாக இல்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு, ஊடகம் மற்றும் மக்கள் குறித்து ஒருவர் பாடம் எடுக்க முயற்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஊடகங்களை ஒட்டுண்ணிகள் என விமர்சிப்பதற்கும், பொதுமக்களை அவமதிப்பதற்கும் முன்பாக, தேசிய அளவிலான தூய்மைப் பட்டியலில் மதுரை ஏன் மிகக் கீழான இடத்திற்குச் சென்றது என்பது குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சொந்தப் பகுதியையே முறையாக சீரமைக்க முடியாத நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தார்மீக நெறிமுறைகளை வகுப்பவராக ஒருவர் வேடமணிவது விசித்திரமாக இருப்பதாகவும் ரேவந்த் சரண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் அதிகாரத்தை வழங்கியபோது ஒருவர் என்ன செய்தார் என்பதைக் கொண்டுதான் அவரது நிர்வாகத் திறன் அளவிடப்படுகிறது என்றும், அதிகாரத்தை இழந்த பிறகு எவ்வளவு உரக்கப் பிரசங்கம் செய்கிறார் என்பதைக் கொண்டு நிர்வாகத் திறனை மதிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மதுரையை மையமாக வைத்து நிர்வாகம் மற்றும் நல்லாட்சி குறித்து விமர்சனம் செய்துள்ள ரேவந்த் சரண், சம்பந்தப்பட்ட நபரின் அரசியல் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ