Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம்
வருசநாடு அருகே தும்மக்குண்டுவைச் சேர்ந்த துரைமுருகன் (38), ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே நகை அடகுக்கடை நடத்தி வந்தார்.
இவரிடம் 64 வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நகைகளை மீட்க வாடிக்கையாளர்கள் சென்றபோது கடை பூட்டப்பட்டிருந்ததுடன், துரைமுருகன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் 64 வாடிக்கையாளர்களின் 139 சவரன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன் மற்றும் கடை ஊழியர் ஸ்ரீமதி (26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஸ்ரீமதி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த துரைமுருகனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam