Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
லண்டனில் முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டி, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
சென்னையில் இருந்து டெல்லி வரை உள்ள ஊடக நிறுவனங்கள், லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தை பெரிதுபடுத்துவதில் ஒன்றையொன்று போட்டியிட்டு செயல்படுவது தற்போதைய காலத்தின் அவலநிலைக்கு சிறந்த உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பரவலான மின்வெட்டு நிலவி வருவதாகவும் விமர்சித்துள்ள பி.டி.ஆர்., இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு பதிலாக லண்டனில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த கார் ரேஸுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதாக சாடியுள்ளார்.
மேலும், “மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரசாங்கத்தையும், தங்களுக்குத் தகுதியான ஒட்டுண்ணி ஊடகங்களையும் பெறுகிறார்கள்” என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P