Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன் , 13 செப்டம்பர் (ஹி.ச.)
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ், முதல் செட்டை 6–3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
அடுத்த 2 செட்களிலும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் அந்த இரு செட்களும் டைபிரேக்கர் வரை சென்றன.
இதில் ஸ்வரேவ் தனது அனுபவத்தை பயன்படுத்தி முக்கியமான புள்ளிகளை கைப்பற்றினார். முடிவில் 6–3, 7–6 (7), 7–6 (6) என்ற நேர் செட் கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு ஸ்வரேவ் முன்னேறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA