Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில், 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள எண்ணெய் வயல் பகுதியில் மேலும் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி தனியார் நிறுவனம் ஒன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கூடுதலாக ஐந்து கிணறுகளை அமைத்து உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதியில் புதிய கிணறுகள் அமைக்கப்படுவதால் கடல் வாழ் உயிரினங்கள், மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுமா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b