திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த முயற்சி - இந்து முன்னணியைச் சேர்ந்த 40 பேர் கைது
திண்டுக்கல், 14 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களின் பாது
Attempt to hold Vinayagar procession in Dindigul in defiance of ban


திண்டுக்கல், 14 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

இதில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைபட்டி பகுதியில், காவல்துறையின் தடை உத்தரவை மீறி அனுமதியின்றி சுமார் மூன்று அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அந்த அமைப்பினர் முயன்றபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 40 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அந்த சிலை திண்டுக்கல் கோட்டை குளத்தில் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / vidya.b