நடிகர் அஜித்துக்கு ரேசிங் கார் மினியேச்சரை பரிசளித்தார்- முதல்வர் விஜய்
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், பிரபல நடிகர் அஜித்தின் அழைப்பை ஏற்று அவர் பங்கேற்ற ''லீ மேன்ஸ் கப்'' கார் பந்தயத்தைப் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். லண்டனில் நடைபெற்ற
நடிகர் அஜித்துக்கு ரேசிங் கார் மினியேச்சரை பரிசளித்த முதல்வர் விஜய்


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், பிரபல நடிகர் அஜித்தின் அழைப்பை ஏற்று அவர் பங்கேற்ற 'லீ மேன்ஸ் கப்' கார் பந்தயத்தைப் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் போது,

நடிகர் அஜித் குமாருக்கு நடிகர் விஜய் பிரத்யேகமாக ரேசிங் கார் மினியேச்சர் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த பரிசில் பிரியமுடன் விஜய், அன்பான சகோதரர் அஜித் என்று அன்புடன் குறிப்பிட்டு கையெழுத்திட்டு வழங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமாரின் நீண்ட நாள் கனவான கார் பந்தயத்தின் மீதான தீராத காதலை அறிந்த விஜய், அவரது ரேசிங் ஆர்வத்தை கௌரவிக்கும் வகையில் இந்த மினியேச்சர் காரை தேர்வு செய்து பரிசளித்ததாக கூறப்படுகிறது.

ரேசிங் வீரராகவும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று வருபவருமான அஜித்துக்கு இது மிகவும் பொருத்தமான பரிசாக அமைந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் அஜித் குமாரும் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் விஜய்க்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இருவரும் பரஸ்பரம் பரிசுகளை பரிமாறிக்கொண்ட இந்த சந்திப்பு, திரையில் போட்டியாளர்களாக சித்தரிக்கப்பட்டாலும் நிஜத்தில் அவர்கள் கொண்டுள்ள சகோதரத்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவரும் இந்த பரிசு பரிமாற்றத்தை கொண்டாடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b