Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 14 செப்டம்பர் (ஹி.ச.)
கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான் தனது 75-வது வயதில் காலமானார்.
அவரது மறைவு கேரள அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பேபி ஜான் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்ட அவர், கடந்த 1969-ம் ஆண்டு இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் பல ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்கொண்ட பேபி ஜான், மிசா மற்றும் இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சூர் மாவட்டத்தின் மணலூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகவும் பேபி ஜான் போட்டியிட்டிருந்தார்.
பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய மூத்த தலைவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam