Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கறிக்குப்பம் கிராமத்தில் இந்த ஆண்டு புதிதாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஊர்வலம், கறிக்குப்பம் அருகே உள்ள தோப்பு இருப்பு பகுதிக்கு சென்றபோது, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களது தெரு வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் வரக்கூடாது என்றும், தாள வாத்தியங்கள் இசைக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க மாற்று சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியை கடந்து செல்ல முயன்றபோது, அங்கு சிலர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தகவலறிந்து சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam