டெல்லியில் ஜிம் பயிற்சியாளர் சுட்டுக்கொலை – 2 பேருக்கு போலீஸ் வலை
புதுடெல்லி, 14 செப்டம்பர் (ஹி.ச.) டெல்லி தெற்கு பகுதியில் உள்ள ஆயா நகர் கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜிம் பயிற்சியாளரான விஜய் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் ச
டெல்லி போலீஸ்


புதுடெல்லி, 14 செப்டம்பர் (ஹி.ச.)

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள ஆயா நகர் கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜிம் பயிற்சியாளரான விஜய் என்பவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஆயா நகர் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P