விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க அனுமதி கோரியவர் கத்தியால் குத்திக் கொலை
திண்டுக்கல், 14 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பொம்மன் என்ற (வயது44) விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஊர் தொடர்பான பிரச்சினைகளில் பொம்மன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த
Ganesh Chaturthi


திண்டுக்கல், 14 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பொம்மன் என்ற (வயது44) விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஊர் தொடர்பான பிரச்சினைகளில் பொம்மன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் ஊர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க அனுமதி கோரி, பொம்மன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஊரைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், தனது மூன்றாவது மனைவி ரேவதி வசித்து வரும் வெள்ளியணை அருகே உள்ள முஷ்டகணத்துப்பட்டி பகுதிக்கு பொம்மன் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் பொம்மனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொம்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வெள்ளியணை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க அனுமதி கோரிய நிலையில், ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN