Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்பார்வதி என்கின்ற யானை உள்ளது.
அதற்கு சற்று கண் பார்வை குறைந்த காரணத்தினால் தற்பொழுது அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா என்கின்ற ஐந்து வயது யானை ஒன்று நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்கள் பயணம் செய்து இன்று அதிகாலைமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு யானையானது கொண்டுவரப்பட்டது.
யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாளன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு புதிய யானை வந்தது பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் வருகின்ற 17ஆம் தேதி கும்பாபிஷேகமானது நடைபெற உள்ளது.
மேலும் இதுபோன்று நான்கு யானைகள் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகிய நான்கு கோயில்களுக்கும்அசாமில் இருந்து நான்கு யானைகள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இது வரை ஐந்து யானைகள் தமிழகத்திற்கு நன்கொடையாளர்களாக வழங்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b