மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி - இடதுசாரி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ம. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழ
Five-cornered contest in Maduranthakam and Dharapuram by-elections


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ம. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான இடதுசாரி வேட்பாளர்களின் பெயர்கள் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இதுவரை வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரி கட்சிகள், தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே களம் காண்பதாக அறிவித்துள்ளன.

இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சிகள், மற்றும் தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால், இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b