விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆரணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
திருவண்ணாமலை, 14 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விநாயக
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆரணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


திருவண்ணாமலை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவும், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அலங்கரிக்கவும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆரணி மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து அதிகரித்தாலும், தேவை அதைவிட பல மடங்கு உயர்ந்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.

இந்த சந்தையில் வழக்கமாக 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப் பூ, தற்போது 800 ரூபாய்க்கும், அதே போல் முல்லைப் பூவும் கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சாமந்திப் பூ, கேந்திப் பூ, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த பூ விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள், தற்போதைய விலை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b