Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்றத் தலைவரும், திமுக நகர செயலாளருமான எஸ். சௌந்தரராஜன் அளித்த மனுவின் பேரில், செப்டம்பர் 13ஆம் தேதி காவல் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி பழைய பெரியார் சிலை இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல் துறை பின்வரும் காரணங்களைக் கூறி அனுமதியை மறுத்துள்ளது
15.06.2026 அன்று புதிய பெரியார் சிலை அமைக்கப்பட்ட பிறகு, பழைய இடத்தில் நிகழ்ச்சி நடத்தினால் போக்குவரத்துக்கு அதிக இடையூறு ஏற்படும்.
காவல் சட்டம் பிரிவு 30(2)-ன்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்தில் நிகழ்ச்சி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படும்.
அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினால் மேலும் இடையூறு ஏற்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிகழ்ச்சி நடத்த முடியாது.
இதனால், அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு ஊர்வலம் / நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி மறுக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN