மதுரையில் கொலை செய்து விட்டு மருத்துவமனையில் பதுங்கிய இருவர் அதிரடி கைது
மதுரை, 14 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெருங்குடி போலீச
Silaimaan Police Station


மதுரை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ஒருவர் சிகிச்சை எடுத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகளான வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் கப்பலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கொடைக்கானலை சேர்ந்த தெய்வேந்திரன் (28) என்பதும், இவர் சின்ன உடைப்பு பகுதியில் ராஜபாண்டியின் மனைவி பானுப்பிரியா என்பவரை சந்தித்து விட்டு, பெரியார் நகர் வழியாக திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, பின் தொடர்ந்து வந்த பானுப்பிரியாவின் கணவர் ராஜபாண்டியும், அவரது நண்பர் ராஜேஷும் தெய்வேந்திரனை அருவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

தெய்வேந்திரன் மற்றும் அவர் உடன் வந்த மேலூரை சேர்ந்த இளைஞர் மற்றும் ராஜபாண்டி, ராஜேஷ் ஆகியோர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ராஜேஷ்க்கு கண்ணில் காயம் ஏர்பட்டுள்ளது.

இதனால் குற்றவாளிகள் வலையங்குளம் ஆரம்ப சுகாதாரம் நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கள்ளத்தொடர்பினால் தான் கொலை நடந்ததா? அல்லது கொலைக்கு வேறும் ஏதும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து சிலைமான் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN