Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் உள்ள இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கிடங்கில் அரசின் பொது விநியோக திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானிய மூட்டைகள் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
தீ மளமளவென பரவுவதைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உணவு தானியங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படவில்லை.
உயிர் சேதம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b