தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த ஆன்மீக எழுச்சியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டும், வீடுகளில் களிமண் சிலைகள் வைக்கப்பட்டும் மக்
BJP President Nainar Nagendran's Vinayagar Chaturthi greetings.


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த ஆன்மீக எழுச்சியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டும், வீடுகளில் களிமண் சிலைகள் வைக்கப்பட்டும் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த மங்கலகரமான நாளில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயரிய தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பாரத மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறைந்து, தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம்.

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b