Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் ஷம்ஷாபாத் அருகே ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஹோட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் படுகாயமடைந்தனர்.
சாலை தடுப்பில் இருந்த மின்கம்பத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று மோதியதை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதிவிட்டு, அருகில் இருந்த ஹோட்டல் மற்றும் வெற்றிலை பாக்கு கடைக்குள் புகுந்துள்ளது.
அப்போது ஹோட்டலுக்கு வெளியே டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் மற்றும் பல பயணிகள் பலத்த காயமடைந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணைக்குப் பிறகு கூடுதல் விவரங்களை வழங்குவோம் என்றார்.
விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,
காலை சுமார் 5.30 மணியளவில் பேருந்து ஹோட்டலுக்குள் புகுந்தது. நான் இங்கு 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், இதுபோன்ற விபத்தை இந்த பகுதியில் இதுவரை பார்த்ததில்லை.
ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார் என்றார்.
Hindusthan Samachar / vidya.b