Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே என்று திமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில்,
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, இது திமுக சதி என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு என Reels போட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம் எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல் என்று பதிவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN