Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையை தவெக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
மாணவன் தமிழ்ச்செல்வனின் உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்டு போராடும் பொதுமக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக தவெக ஆட்சி இருப்பதாகவும் கனிமொழி விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P