Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழி மற்றும் கலாச்சார சமூகங்களை இணைப்பதில் இந்தியின் பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, அரசியல் நிர்ணய சபை தேவநாகரி எழுத்து வடிவில் உள்ள இந்தியை இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக அறிவித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்தி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
அனைத்து சக குடிமக்களுக்கும் 'இந்தி திவாஸ்'
(அலுவல் மொழி நாள்) நல்வாழ்த்துகள்.
அலுவல் மொழியாகத் திகழும் இந்தி, மக்கள் தொடர்பு, நல்லாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அனைத்து இந்திய மொழிகளுடனும் இணைந்து முன்னேறி வரும் இந்தி, தற்போது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான மொழியாகவும் உருவெடுத்து வருகிறது.
அலுவல் மொழி தினத்தை முன்னிட்டு, இந்தி மொழியைச் செழுமைப்படுத்துவதில் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கிய அனைத்துச் சான்றோர்களுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாளில், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்த நாம் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b