அசாமில் ரூ.1 கோடி மதிப்புள்ள யாபா மாத்திரைகள் பறிமுதல் – ஒருவர் கைது!
அசாம், 14 செப்டம்பர் (ஹி.ச.) அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட தகவலின்
க


அசாம், 14 செப்டம்பர் (ஹி.ச.)

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய நடவடிக்கையில், கைலைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போய்ராபூர் பகுதி-1-ஐச் சேர்ந்த ஜெய்ருல் இஸ்லாம் (23) என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கும்ரா பஜார் பகுதியில் இருந்து அவர் பயணம் மேற்கொண்ட போது போலீசார் அவரை பிடித்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர் வைத்திருந்த சிவப்பு நிற கேரி பையில் சந்தேகத்திற்கிடமான யாபா மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த யாபா மாத்திரைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாரிடம் ஒப்படைக்கப்பட இருந்தன என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / Durai.J