மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
செங்கல்பட்டு, 14 செப்டம்பர் (ஹி.ச) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைக
மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை - இடைத்தேர்தலை முன்னிட்டு கெடுபிடி தீவிரம்


செங்கல்பட்டு, 14 செப்டம்பர் (ஹி.ச)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் தொகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

முக்கிய சாலைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் முகாமிட்டு கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b