Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவை போற்றும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் அவர் சில நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா என்று புகழாரம் சூட்டிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் கட்டமைக்கும் வகையில் 'நம் அண்ணாவின் ஆட்சியை' மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம் என்று தொண்டர்களிடையே தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b