Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 15 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் நாரா லோகேஷ் நாளை (செப்.16) நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி அவர் நெல்லூர் சிட்டி மற்றும் கோவூர் ஆகிய 2 தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
நெல்லூர் சிட்டி தொகுதியில் காலை 10 மணிக்கு ஸ்டோன் ஹவுஸ் பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.ஆர். அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து காலை 11.10 மணிக்கு மூலப்பேட்டையில் உள்ள டி.எஸ்.ஆர். அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதைத்தொடர்ந்து கோவூர் தொகுதிக்கு செல்லும் லோகேஷ், மதியம் 12.15 மணிக்கு கோவூர் நகரில் நெல்லூர் பைபாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-மந்திரி நந்தமூரி தாரக ராமாராவ் சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை-விஜயவாடா நெடுஞ்சாலை அருகே நடைபெறும் தெலுங்குதேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் கோவூர் தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சி பணிகள் தொடர்பாக அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.
அமைச்சர் லோகேஷ் வருகையையொட்டி தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA