அண்ணாவின் பிறந்தநாளில் அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் நிறுவ உறுதியேற்போம்- எடப்பாடி பழனிசாமி
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவுகளைப் போற்றி வணங்குவதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவ உறுதியேற்போம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி த
EPS


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவுகளைப் போற்றி வணங்குவதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவ உறுதியேற்போம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிகாரத்தைவிட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழைவிட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தியவர் அண்ணா என்றும், அவரது அரசியல் வாழ்க்கை தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்தின் தன்மானக் குரலாகவும், கொடியாகவும், கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவை அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ‘ரீல்ஸ் அரசியல்’ மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்த நாளில் உறுதியேற்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “வாழ்க அண்ணா நாமம்” என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P