Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என தெரிவித்துள்ளார்.
தலைநிமிர்ந்த தமிழர், தலைநிமிர்ந்த தமிழ்நாடு என்ற இலட்சியத்தை நனவாக்குவதற்காக தமிழன்னையின் தனயனாகப் பிறந்து, தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு பேரறிஞர் அண்ணா என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழர்களின் சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை மற்றும் தமிழ்ப்பற்று ஆகிய கொள்கைகளுக்கு அண்ணா அளித்த முக்கியத்துவத்தையும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.
சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை, தமிழ்ப்பற்று ஆகியவற்றில் பேரறிஞர் அண்ணா என்றென்றும் வாழ்வார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ