பல மாநிலங்களில் சீரான சிவில் சட்ட மசோதா முன்னேற்றம் அடைந்து வருகிறது - பா.ஜ.க தலைவர் கருணாசாகர்
ஹைதராபாத், 15 செப்டம்பர் (ஹி.ச.) சீரான பொது சிவில் சட்டம் (UCC) என்பது அரசியல் விவாதத்தைத் தாண்டி பல இந்திய மாநிலங்களில் அமலாக்கத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாஜக தலைவர் கருணாசாகர் இன்று தெரிவித்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று செய
பல மாநிலங்களில் சீரான சிவில் சட்ட மசோதா முன்னேற்றம் அடைந்து வருகிறது - பாஜக தலைவர் கருணாசாகர்


ஹைதராபாத், 15 செப்டம்பர் (ஹி.ச.)

சீரான பொது சிவில் சட்டம் (UCC) என்பது அரசியல் விவாதத்தைத் தாண்டி பல இந்திய மாநிலங்களில் அமலாக்கத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாஜக தலைவர் கருணாசாகர் இன்று தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சீரான பொது சிவில் சட்டம் (UCC) குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன், அரசு குளிர்காலக் கூட்டத் தொடரில் அதனை தாக்கல் செய்து மசோதாவை நிறைவேற்றும்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் 21 மாநிலங்களிலும் UCC அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து, UCC மீதான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் UCC என்பது குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரான சட்டம் அல்ல, ஆனால் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் சம நீதி மற்றும் பாலின நீதிக்கானது. ஒரு தேசம் ஒன்றாக இருக்கும்போது, மத எல்லைகளைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சிவில் கட்டமைப்பு இருப்பது அவசியம்.

என்று அவர் தெரிவித்தார்.

சீரான பொது சிவில் சட்டம் UCC மசோதா ஏற்கனவே மூன்று மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரியில் உத்தராகண்ட், 2026 மார்ச்சில் குஜராத் மற்றும் 2026 மே மாதத்தில் அசாம் என மூன்று மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b