முதலீட்டை ஈர்க்கத்தான் லண்டன் சென்றீர்களா? – முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) சம்வர்தா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றாரா? என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மறைந்
அப்பாவு


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

சம்வர்தா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றாரா? என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தபோது, இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சம்வர்தா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக அப்போதைய தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2010-ம் ஆண்டு அரசாணை எண் 631 மூலம் ஒரக்கடம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், வடகால், பொந்தூர், ஊரப்பாக்கம், குறுவன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் அந்த நிறுவனம் மோட்டார் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இதன்மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி இந்திய தொழில் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கத்தான் லண்டன் சென்றீர்களா? வேறு ஈர்ப்பும் இருக்கிறதா, முதல்வர் அவர்களே?” என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam